அதானி குழும விவகாரம்.! மத்திய அரசின் செபி அமைப்பு பதில் கூற உச்சநீதிமன்றம் உத்தரவு.!

Default Image

அதானி விவகாரம் குறித்து , இந்திய பங்கு சந்தையை கண்காணிக்கும் செபி அமைப்பானது திங்கள் கிழமை பதில் கூற என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் அதானி குழுமமானது அதிக முதலீடு பெருவதற்கு பங்குச்சந்தையில் சில முறைகேடான விஷயங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியது. இந்த குற்றத்தை அதானி குழுமம் தொடர்ந்து மறுத்து வந்தாலும், அந்த அறிக்கையின் தாக்கம் இந்திய பங்குச் சந்தையை வெகுவாக பாதித்தது. அதானி பங்குகளும் பெரும் அளவில் சரிவை சந்தித்தன. இதனால் உலக பணக்கார வரிசையில் இருந்த அதானி விறுவிறுவென அடுத்தடுத்த இடங்களை நோக்கி சரிந்தார்.

உச்சநீதிமன்றத்தில் அதானி விவகாரம் : இந்த விவகாரத்தை பொதுநல வழக்காக உச்சநீதிமன்றம் எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் மனு அளித்து இருந்தனர். இருந்தும், இது இரு தனியாக நிறுவனங்களுக்கு இடையேயான பிரச்சனை என்பதால் விசாரணை நடைபெறுமா என்று கேள்வியும் எழுந்தது. இது இரு நிறுவனங்களுக்கான பிரச்சனை தான். ஆனால், அதில் பாதிக்கப்பட்டிருப்பது பல சிறு முதலீடுகளை செய்துள்ள சாமானியர்கள். எனவே இதனை பொதுநல வழக்காக கருத வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து இன்று இந்த மனு விசாரணைக்கு ஏற்று கொள்ளப்படும் என கூறப்பட்டு இருந்தது.

செபி அமைப்பு : இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு அதானி விவகாரம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரிக்கையில், இந்த பங்கு சந்தை நிலவரத்தை மத்திய அரசு சார்பில் கண்காணித்து வரும் செபி அமைப்பு அதானி குழும விவகாரம் குறித்து திங்கள் கிழமை பதில் கூற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சிறு முதலீட்டாளர்கள் : மேலும், இந்த திடீரென பங்குச்சந்தை வீழ்ந்த காரணத்தால் சிறு முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த விவகாரம் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது. இதற்கு மத்திய அரசு சார்பில் செபி அமைப்பானது ‘அதானி’ விவகாரத்தை மிக மிக கவனமாக கண்காணித்து வருகிறது என்று பதில் கூறியது.

உச்சநீதிமன்ற உத்தரவு : இதற்கு பதிலளிக்கும் விதமாக உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு செபி செயல்பாட்டில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. தற்போது திடீரென பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளதால் சாமானிய மக்கள், சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆதலால் அதனை கருத்தில் கொண்டு, உங்கள் நடைமுறைகளில் ஏதேனும் மாற்றம் கொண்டு வர வேண்டுமா? என்பது குறித்து நிதி அமைச்சகத்தையும் ஆலோசித்து திங்கள்கிழமை பதில் கூறுங்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு பங்குச் சந்தையை கண்காணிக்கும் செபி அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்