வணிகம்

முதல் நாளே ஏற்றம் கண்ட பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 62,945 புள்ளிகளில் வர்த்தகம்..!

Published by
செந்தில்குமார்

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 444 புள்ளிகள் உயர்ந்து 62,945 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,589 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடந்த வாரங்களாக சரிவில் வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் 2வது நாளான இன்றும் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 62,801 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 444 புள்ளிகள் அல்லது 0.71% என உயர்ந்து 62,945 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 90.15 புள்ளிகள் அல்லது 0.49% உயர்ந்து 18,589 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 62,501 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,499 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.

மஹிந்திரா & மஹிந்திரா, ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபின்சர்வ், இண்டஸ்இண்ட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், மாருதி சுசுகி இந்தியா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன

Published by
செந்தில்குமார்

Recent Posts

நாளை சென்னைக்கு கனமழை அலர்ட்…மின்தடை ஏற்படும் இடங்களை குறிச்சி வச்சிக்கோங்க!

சென்னை :  நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…

7 hours ago

நாளை நடைபெறவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

8 hours ago

கனமழை எதிரொலி : திருச்சி பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

8 hours ago

நாளை ரெட் அலர்ட்! மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மயிலாடுதுறை :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…

8 hours ago

நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர் :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

9 hours ago

“அமரன் படம் சூப்பர் நண்பா”…இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய்!

சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…

9 hours ago