பங்குச்சந்தை: இந்த வாரம் தொடங்கியது முதல் தற்போது வரை இந்திய பங்குச்சந்தைகள் உச்சம் பெற்றே வருகிறது.
இந்திய அரசியலில், சிறு மாற்றம் ஏற்பட்டதிலிருந்தே இந்திய பங்குச்சந்தைகள் உச்சம் பெற்று வருகிறது. அதிலும், கடந்த வாரம் ஒரு சில நாட்கள் பங்குச்சந்தைகள் குறைந்த நிலையில், இந்த வாரம் தொடக்கம் முதலே, அதாவது கடந்த 2 நாட்களாக புதிய உச்சத்தை கண்டுள்ளது. மேலும், இன்றைய நாளிலும் தொடர்ந்து 3-வது இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 சரிவை காணாமல் உச்சம் கண்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
நேற்றைய நாளான செவ்வாய்க்கிழமை வர்த்தக நாளின் முடிவில் மும்பை பங்குச்சந்தை (BSE) குறியீடான சென்செக்ஸ் 308.37 புள்ளிகள் உயர்ந்து 77,301.14 புள்ளியிலும், நேஷனல் பங்கு சந்தை (NSE) குறியீடான நிஃப்டி 9230 புள்ளிகள் உயர்ந்து 23,557.90 புள்ளியிலும் முடிவடைந்தன. அதன்பின் இன்று காலை ஆசிய பங்கு சந்தையின் ஏற்றம் காரணமாக தேசிய பங்கு சந்தை (NSE) நிப்ஃடி 30.35 புள்ளிகள் உயர்ந்து 23,558.25 புள்ளிகளிலும், சென்செக்ஸ் 102.02 புள்ளிகள் உயர்ந்து 77,403.16 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகம் தொடங்கியது.
அதன்பிறகு சில இறக்கங்களை கண்டு நிலையில் சென்செக்ஸ் 118.65 புள்ளிகள் உயர்ந்து 77,419.79 புள்ளிகளில் வர்த்தகம் தற்போது நடைபெற்று வருகிறது. அதே போல தற்போது சற்று ஏற்ற இறக்கத்தை கண்ட நிப்ஃடி 17.50 புள்ளிகள் சரிவை கண்டு 23,540.30 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் நிறுவனம், கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய நிறுவனங்கள் பங்குகள் எல்லாம் அதிக லாபம் எட்டியுள்ளன. அதே நேரம் டைட்டன், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், பிபிசிஎல், ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனத்தின் பங்குகள் எல்லாம் நட்டத்தை சந்தித்து வருகின்றன.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…