ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 60,130 புள்ளிகளாக வர்த்தகம்..!

Default Image
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 74.61 புள்ளிகள் அதிகரித்து 60,130 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,769 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடந்த வாரத்தில் சரிவில் வர்த்தககமாகிவந்த பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 60,202 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 74.61 புள்ளிகள் அல்லது 0.12% என உயர்ந்து 60,130 புள்ளிகளாக நிலையாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 25.85 புள்ளிகள் அல்லது 0.15% என உயர்ந்து 17,769 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,056 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,743 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. எச்டிஎஃப்சி வங்கி, ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், டெக் மஹிந்திரா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்