மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் பிஎஸ்இ சென்செக்ஸ் 446.03 புள்ளிகள் உயர்ந்து 63,416 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு.
இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் கடந்த வாரம் இதுவரை இல்ல உச்சத்தை எட்டி புதிய சாதனையை படைத்தது. அதனைத்தொடர்ந்து இன்றைய வர்த்தக நாளில் 63,151 புள்ளிகள் எனத் தொடங்கிய சென்செக்ஸ், வர்த்தக நாளின் முடிவில் 446.03 புள்ளிகள் உயர்ந்து 63,416 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 126.20 புள்ளிகள் அல்லது 0.68% உயர்ந்து 18,817 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 62,970 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,691 புள்ளிகளாகவும் நிறைவடைந்தது.
கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்திருப்பது மும்பை பங்குச்சந்தை குறியீடுகள் உயர்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால் சென்செக்ஸ் குறியீட்டில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
மாருதி சுசுகி இந்தியா, ஐடிசி லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன. நிஃப்டி குறியீட்டில் உள்ள 50 நிறுவனங்களின் பங்குகளில், 38 நிறுவனங்கள் லாபமும், 12 நிறுவனங்கள் நஷ்டமும் அடைந்துள்ளன.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…