ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 62,027 புள்ளிகளாக நிறைவு..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 123.38 புள்ளிகள் உயர்ந்து 62,027 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,314 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த 4 நாட்களாக சரிவுடன் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தை நேற்று ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் வாரத்தின் 5-வது நாளான இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது. ஆனால் வர்த்தகர்கள் அனைவரையும் எதிர்பார்க்காத வகையில் பங்குச்சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
அந்த வகையில் இன்றைய வர்த்தக நாளில் 61,857 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 123.38 புள்ளிகள் அல்லது 0.20% என உயர்ந்து 62,027 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 17.80 புள்ளிகள் அல்லது 0.097% உயர்ந்து 18,314 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,904 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,297 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
மஹிந்திரா & மஹிந்திரா, இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், எச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, என்டிபிசி லிமிடெட், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், நெஸ்லே இந்தியா லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.