பங்குச்சந்தை தொடர்ந்து உயர்வு! சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.!
பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 666 புள்ளிகள் அதிகரித்து 59,077ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,513 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 666 புள்ளிகள் அல்லது 1.14% அதிகரித்து 59,077 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 201 புள்ளிகள் அல்லது 1.16% அதிகரித்து 17,513 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 58,410 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,311 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.