வரலாற்றில் புதிய உச்சம் – சென்செக்ஸ் 531.96 புள்ளிகள் உயர்ந்து, 56,656.68 புள்ளிகளில் வர்த்தகம்!

இந்திய பங்கு சந்தையானது ஏற்றம் காணும் என நிபுணர்கள் கூறி வந்த நிலையில், இன்று மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் காணப்படுகிறது.
நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தினை எட்டி வரும் நிலையில், இன்றும் சற்று ஏற்றம் கண்டுள்ளது.
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 198.72 புள்ளிகள் அதிகரித்து, 56,323.44 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் அதிகரித்து, 16,752.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 321.99 புள்ளிகள் அதிகரித்து, 56,446.71 புள்ளிகளாகவும், நிஃப்டி 103.30 புள்ளிகள் அதிகரித்து, 16,808.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1,535 பங்குகள் ஏற்றத்திலும், 339 பங்குகள் சரிவிலும், 107 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்திய பங்குசந்தை புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. அதாவது, சென்செக்ஸ் குறியீட்டு எண் 531.96 (0.95%) புள்ளிகள் உயர்ந்து, 56,656.68 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது. இதுபோன்று தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 152.85 (0.91%) புள்ளிகள் உயர்ந்து, 16,858.05 புள்ளிகளாக காணப்படுகிறது.
இந்திய சந்தையானது ஏற்றம் காணும் என நிபுணர்கள் கூறி வந்த நிலையில், இன்று மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, 22 பைசா அதிகரித்து, 73.46 ரூபாயாக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் 73.68 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
மேலும், இந்திய பங்குச்சந்தை புதிய உச்சத்தில் ஏற்றம் காணப்படும் நிலையில், முதலீட்டாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் என்றே சொல்லலாம். ஆசிய சந்தையில் இன்று சில தடுமாற்றம் இருந்தாலும் பெரும்பாலான சந்தைகள் உயர்வுடன் காணப்படுகிறது என்பது குறிப்பித்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025