Gold Rate: ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் இதோ…

gold-jewellery

தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் சரிவை சந்தித்த ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது.

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். தற்போது, இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் காரணமாக, தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.

(13.10.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,280க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,410க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50காசு குறைந்து ரூ.75.50க்கும். கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.75,500க்கும் விற்பனையாகிறது.

(12.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.43,280க்கும், கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ரூ.5,410க்கும் விற்பனையானது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து ரூ.75.50க்கும், கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து ரூ.75, 500க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்