ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு.!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.35,808-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,476 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,431 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 35,448 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 360 ரூபாய் உயர்ந்து 35,808 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் இன்று ரூ.4,698 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 37,224 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 360 ரூபாய் உயர்ந்து 37,583 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.51.60 ஆக இருந்தது. ஆனால், இன்று அதன் விலை ரூ.52.10 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 52,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.