நேற்று ஒரே நாளில் மும்முறை உயர்ந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது!

gold price

GOLD: அட்சய திருதியையொட்டி நேற்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1240 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. அட்சய திருதியையொட்டி ஆபரணத் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.1,240 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.54,160க்கு விற்பனையானது. தங்கம் விலை அதிகரித்தும் பொதுமக்களிடையே வாங்கும் ஆர்வம் குறையவில்லை.

இந்நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.16,000 கோடிக்கு (24,000 கிலோ) தங்கம் விற்பனையானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 4,000 கிலோ அதிகமாகும்.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (11-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,000க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,750க்கும் விற்பனையாகிறது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் குறைந்து ரூ.90.50க்கும், கிலோ ரூ.90,500க்கும் விற்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்