அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ.!
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் நகைகள் வாங்க பெண்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
அதுபோல், கடந்த வாரம் தங்கம் விலை கடும் சரிவை கண்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், வார தொடக்க நாளான நேற்றும் சற்று குறைந்த தங்கம் விலை இன்று திடீரென உச்சம் தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
அதன்படி, சென்னையில் (14.11.2023) இன்று 2 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.44,920க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,615க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு நேற்றைய தினம் போல், 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு..! ஆட்சியர் வெளியிட்ட எச்சரிக்கை செய்தி..!
(13.11.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44.720க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,590க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ரூ.75.40க்கும், கிலோ வெள்ளி ரூ.75,400க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.