அதிரடியாக உயர்ந்தது தங்கம் – வெள்ளி விலை.! இன்றைய நிலவரம் என்ன?
சென்னை : தொடர்ந்து இரண்டாம் நாளாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில், இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்துவரும் தங்கம், வெள்ளி விலையினால் நுகர்வோர் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (29-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200க்கு விற்பனை ஆகிறது. நேற்று ரூ.6,740ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.35 அதிகரித்து ரூ.6775ஆக விற்பனையாகிறது. அதே வேலையில், வெள்ளி விலை இன்றும் கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.102.20 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,02,200 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (28-05-2024) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,920க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,740க்கு விற்பனையானது. அதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று முன் தினம் ரூ.97.50க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.3.50 உயர்ந்து கிராமுக்கு ரூ.101-க்கும் கிலோவுக்கு ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.