குட்நீயூஸ்..!20% வரை குறையும் சமையல் எண்ணெய் விலை…!
இந்தியாவில்,சமையல் எண்ணெய் விலை 20% வரை குறைந்து வருவதாக, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலன்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் மத்திய அரசு,சமையல் எண்ணெய் விலைகள் குறைந்து வருகின்றன என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலன்,உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
அதன்படி,நுகர்வோர் விவகாரங்கள் துறையின் தரவுகளின் படி, கடந்த ஒரு மாத காலமாக சமையல் எண்ணெய்களின் விலைகள் குறைந்து வருகின்றன.மேலும்,மும்பையில் கிட்டத்தட்ட 20 சதவீதமாக குறைந்துள்ளது.
சமையல் எண்ணெய்களின் விலைகள் பின்வருமாறு (மும்பை விற்பனை விலை அடிப்படையில்):
- மே 5 ஆம் தேதியன்று சூரியகாந்தி எண்ணெய் ஒரு கிலோ ரூ.188 ஆக இருந்தது,தற்போது,ஒரு கிலோ ரூ.157 ஆக,16 சதவீதம் வரை குறைவு.
- மே 7 ஆம் தேதி பாமாயிலின் விலை கிலோ ரூ.142 ஆக இருந்தது, ஆனால்,தற்போது 19 சதவீதம் குறைந்து,ஒரு கிலோ ரூ.115 ஆகவுள்ளது.
- மே 20 அன்று சோயா எண்ணெயின் விலை ஒரு கிலோ ரூ .162 ஆக இருந்தது,ஆனால்,தற்போது 15 சதவீதம் குறைந்து,ஒரு கிலோ ரூ .138 ஆகவுள்ளது.
- அதே நேரத்தில் மே 16 ஆம் தேதியன்று ஒரு கிலோ ரூ .175 ஆக இருந்த கடுகு எண்ணெய் தற்போது 10 சதவீதம் குறைந்து,ஒரு கிலோ ரூ.157 ஆக குறைந்துள்ளது.
- மே 14 அன்று நிலக்கடலை எண்ணெய் ஒரு கிலோ ரூ.190 ஆக இருந்தது,தற்போது,8 சதவீதம் குறைந்து ஒரு கிலோ ரூ .174 ஆகவுள்ளது.
- மே 2 அன்று வனஸ்பதி எண்ணெய் ஒரு கிலோ ரூ.154 ஆக இருந்தது, தற்போது 8 சதவீதம் குறைந்து,ஒரு கிலோ ரூ .141 ஆகவுள்ளது.