பங்குச்சந்தை: நிஃப்டி அதன் வாழ்நாள் அதிகபட்சமாக 159 புள்ளிகள் உயர்ந்து, 23,481 புள்ளிகளை எட்டி இருக்கிறது. அதே நேரம் சென்செக்ஸ் 539 புள்ளிகள் அதிகரித்து 77, 145 என எட்டியிருக்கிறது.
நேற்றைய வர்த்தக நாள் முடிவில் NSE நிஃப்டி 23,322 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில், தற்போது இன்றைய வர்த்தக நாள் திறக்கும் பொழுதே 159 புள்ளிகள் உயர்ந்தது 23,481 புள்ளிகளை கடந்து வர்த்தகத்தை தொடங்கி இருக்கிறது. இது வரை இல்லாத அளவில் வர்த்தக தொடக்கத்தில் நிஃப்டி புள்ளிகள் உச்சம் தொட்டு வரலாறு படைத்துள்ளது.
மேலும், பிஎஸ்இ (BSE Nifty) நிஃப்டியை பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.432.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் சற்று மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். மும்பை பங்கு சந்தை குறியீடான (BSE Sensex) சென்செக்ஸ் வர்த்தகநாளின் தொடக்கத்தில் 539 புள்ளிகள் அதிகரித்து 77,145 என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது.
அதன் பின் சிறுதளவு சரிவை கண்டு தற்போது சென்செக்ஸ் மீண்டும் 191.88 புள்ளிகள் அதிகரித்து 76,798.45 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே நேரம், NSE நிஃப்டியும் சிறிதளவு புள்ளிகள் சரிவை கண்டு தற்போது 10.53 மணி அளவில் 57.50 புள்ளிகள் அதிகரித்து 23,380.45 புள்ளிகளில் எகிறி இருக்கிறது.
HUL மற்றும் ICCI வங்கியைத் தவிர அனைத்து சென்செக்ஸ் பங்குகளும் நல்லதொரு வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக நெஸ்லே, விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸ் லாபத்தில் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…