நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.432 லட்சம் கோடியாக உயர்வு! பங்குசந்தையில் புதிய சாதனை.!!

Indian Stock Market

பங்குச்சந்தை: நிஃப்டி அதன் வாழ்நாள் அதிகபட்சமாக  159 புள்ளிகள் உயர்ந்து, 23,481 புள்ளிகளை எட்டி இருக்கிறது.  அதே நேரம் சென்செக்ஸ் 539 புள்ளிகள் அதிகரித்து 77, 145 என எட்டியிருக்கிறது.

நேற்றைய வர்த்தக நாள் முடிவில்  NSE நிஃப்டி  23,322 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில், தற்போது இன்றைய வர்த்தக நாள் திறக்கும் பொழுதே 159 புள்ளிகள் உயர்ந்தது 23,481 புள்ளிகளை கடந்து வர்த்தகத்தை தொடங்கி இருக்கிறது. இது வரை இல்லாத அளவில் வர்த்தக தொடக்கத்தில் நிஃப்டி புள்ளிகள் உச்சம் தொட்டு வரலாறு படைத்துள்ளது.

மேலும், பிஎஸ்இ (BSE Nifty) நிஃப்டியை பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.432.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் சற்று மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். மும்பை பங்கு சந்தை குறியீடான (BSE Sensex) சென்செக்ஸ் வர்த்தகநாளின் தொடக்கத்தில் 539 புள்ளிகள் அதிகரித்து 77,145 என்ற புதிய சாதனையை எட்டியுள்ளது.

அதன் பின் சிறுதளவு சரிவை கண்டு தற்போது சென்செக்ஸ் மீண்டும் 191.88 புள்ளிகள் அதிகரித்து 76,798.45 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே நேரம், NSE நிஃப்டியும் சிறிதளவு புள்ளிகள் சரிவை கண்டு தற்போது 10.53 மணி அளவில் 57.50 புள்ளிகள் அதிகரித்து 23,380.45 புள்ளிகளில் எகிறி இருக்கிறது.

HUL மற்றும் ICCI வங்கியைத் தவிர அனைத்து சென்செக்ஸ் பங்குகளும் நல்லதொரு வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக நெஸ்லே, விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸ் லாபத்தில் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

seeman tvk vijay
INDvENG 3rd ODI ENG won the toss
rohit sharma and virat kohli
Rohit sharma - Virat kohli
Andhra Pradesh CM N Chandrababu naidu
senthil balaji edappadi palanisamy