வாரத்தின் முதல் நாளிலே ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 62,390 புள்ளிகளாக வர்த்தகம்..!

Sensex Rise

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 374.06 புள்ளிகள் உயர்ந்து 62,401 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,314 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடந்த வாரங்களில் சரிவுடன் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தை இன்றைய வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 62,157 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 374.06 புள்ளிகள் அல்லது 0.60% என உயர்ந்து 62,401 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 98.65 புள்ளிகள் அல்லது 0.54% உயர்ந்து 18,413 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 62,027 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,314 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, லார்சன் & டூப்ரோ, டாடா ஸ்டீல், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவங்களின் பங்குகள் மட்டுமே சரிவுடன் காணப்படுகின்றன

மேலும், அந்நிய முதலீட்டாளர்கள் செய்த முதலீடு கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்நதுள்ளது. கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ரூ.18,617 கோடி முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்