இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி..! தொடர் சரிவை சந்தித்த அதானி குழுமம்..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 927 புள்ளிகள் சரிந்து 59,744 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,554 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 60,391 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 533 புள்ளிகள் அல்லது 0.88% என குறைந்து 60,138 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. தற்பொழுது கடும் சரிவை சந்தித்த சென்செக்ஸ் 927 புள்ளிகள் அல்லது 1.53% குறைந்து 59,744 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது.
தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 272.40 புள்ளிகள் அல்லது 1.53% குறைந்து 17,554 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. பங்குச்சந்தையின் சரிவால் சந்தையில் முதலீடு செய்த பல நிறுவனங்களின் பங்குகள் சரிந்து நஷ்டமடைந்துள்ளது.
குறிப்பாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை தொடர்ந்து சரிவைக் கண்டுள்ளது. பங்குகள் விலை வீழ்ச்சியால் அதானி குழும நிறுவனங்களுக்கு ஒரு மாதத்தில் ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.