Sensex Rise [Image source : Moneycontrol]
கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கியது. முன்னதாக, மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தது. அதே போல், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 231.90 புள்ளிகள் வரை சரிந்தது.
இந்த பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணமாக கூறப்படுகிறது. இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று 65,662 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 566.97 புள்ளிகள் ஏற்றமடைந்து 66,079.36 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதேபோல, என்எஸ்இ நிஃப்டி 177.50 புள்ளிகள் ஏற்றமடைந்து 19,689.85 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,512 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,512 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. இதற்கு முன்னால் 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…