sensex [Image source : economictimes/Getty Images]
இந்த வாரத்தில் கடந்த மூன்று நாட்களாக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நான்காவது நாளான நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகியது. அதேபோல வாரத்தின் ஐந்தாவது நாளான இன்றும் கூட பங்குச்சந்தை குறியீடுகள் சரிவுடனே வர்த்தகமாகி வந்தது.
தற்போது, 66,034 புள்ளிகள் என வீழ்ச்சியுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 125.65 புள்ளிகள் சரிவடைந்து 66,282.74 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 42.95 புள்ளிகள் சரிவடைந்து 19,751.05 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,408 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, நிஃப்டி 19,794 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தும், நிஃப்டி 231.90 புள்ளிகள் வரை சரிந்தும் வர்த்தகமாகி வந்தது.
இந்த பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணமாக அமைந்தது. இதற்கு முன்னால் நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…