பிபிசி நிறுவனத்தில் 3 நாள் வருமான வரித்துறை சோதனை செய்ததை குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த செவ்வாய் கிழமையன்று டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வானது 3 நாட்கள் நடைபெற்றது. நேற்று இரவு இந்த வருமான வரித்துறை ஆய்வு நிறைவு பெற்றது. இது குறித்து பிபிசி நிறுவனமே தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தது.
பல்வேறு மொழி வருமானம் : தற்போது வருமான வரித்துறையானது பிபிசி ஆய்வு குறித்து விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில் பிபிசி என்று குறிப்பிடாமல் தனியார் செய்தி நிறுவனம் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. அதில், அந்நிறுவனம் ஆங்கிலம் தவிர்த்து, தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் தங்கள் செய்தி சேவையை டிஜிட்டல், ஆடியோ, ரேடியோ என பல்வேறு வடிவங்களில் வழங்கி வருகின்றனர்.
கணக்கில் வராத வருமானம் : ஆனால், ஆங்கிலத்திற்கு மட்டுமே முறையான கணக்கு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற மொழிக்கான வருமானத்தில் அவர்கள் குறிப்பிட்டதும். தரவுகளின் அடிப்படையிலான தகவல்களும் ஒத்துப்போகவில்லை . அதற்கான உரிய வருமானம் காட்டப்படவில்லை எனவும்,
லண்டனுக்கு பரிமாற்றம் : மேலும், இங்குள்ள நிறுவனத்தின் வருமானங்கள் லண்டனில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு டிஜிட்டல் வாயிலாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு முறையான விதிமுறைகளின் அடிப்படையில் பணப்பரிமாற்றம் செய்யப்படவில்லை எனவும், வருமானத்தில் குளறுபடி இருந்ததாகவும் அதற்கான விளக்கங்கள் கேட்டு அது தாமதமானதால் தான் 3 நாள் ஆய்வு நடைபெற்றது என வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆதாரங்கள் : மேலும், இதுகுறித்து முக்கிய நிர்வாகிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், மேலும் சில முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…