பிபிசி வருமானத்தில் குளறுபடி.? விதிமீறி வெளிநாட்டுக்கு பணம்.? வருமான வரித்துறை விளக்கம்.!

Default Image

பிபிசி நிறுவனத்தில் 3 நாள் வருமான வரித்துறை சோதனை செய்ததை குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

கடந்த செவ்வாய் கிழமையன்று டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வானது 3 நாட்கள் நடைபெற்றது. நேற்று இரவு இந்த வருமான வரித்துறை ஆய்வு நிறைவு பெற்றது. இது குறித்து பிபிசி நிறுவனமே தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தது.

பல்வேறு மொழி வருமானம் : தற்போது வருமான வரித்துறையானது பிபிசி ஆய்வு குறித்து விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில் பிபிசி என்று குறிப்பிடாமல் தனியார் செய்தி நிறுவனம் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. அதில், அந்நிறுவனம் ஆங்கிலம் தவிர்த்து, தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் தங்கள் செய்தி சேவையை டிஜிட்டல், ஆடியோ, ரேடியோ என பல்வேறு வடிவங்களில் வழங்கி வருகின்றனர்.

கணக்கில் வராத வருமானம் : ஆனால், ஆங்கிலத்திற்கு மட்டுமே முறையான கணக்கு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற மொழிக்கான வருமானத்தில் அவர்கள் குறிப்பிட்டதும். தரவுகளின் அடிப்படையிலான தகவல்களும் ஒத்துப்போகவில்லை . அதற்கான உரிய வருமானம் காட்டப்படவில்லை எனவும்,

லண்டனுக்கு பரிமாற்றம் : மேலும், இங்குள்ள நிறுவனத்தின் வருமானங்கள் லண்டனில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு டிஜிட்டல் வாயிலாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு முறையான விதிமுறைகளின் அடிப்படையில் பணப்பரிமாற்றம் செய்யப்படவில்லை எனவும், வருமானத்தில் குளறுபடி இருந்ததாகவும்  அதற்கான விளக்கங்கள் கேட்டு அது தாமதமானதால் தான் 3 நாள் ஆய்வு நடைபெற்றது என வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆதாரங்கள் : மேலும், இதுகுறித்து முக்கிய நிர்வாகிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், மேலும் சில முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்