சென்னையில் வரலாறு காணாத ஆபரண தங்கத்தின் விலை.!
சென்னையில் வரலாறு காணாத வகையில் ஆபரண தங்கத்தின் விலை உச்சம் தொட்டது.
இன்று சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,629 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று இதனுடைய விலை 4,608 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 21 ரூபாய் உயர்ந்துள்ளது.
8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 168 ரூபாய் உயர்ந்து 37,032 ரூபாய்க்கு விற்பனையாகிறது.மேலும் நேற்று 36,864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிலையில் வெள்ளி விலை இன்று சிறிது உயர்ந்துள்ளார். இன்று வெள்ளியின் விலை ரூ.54.10 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 54,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நேற்று ரூ.53.40 ஆக ஒரு கிராம் வெள்ளியின் விலை இருந்தது குறிப்பிடத்தக்கது.