சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.73 குறைந்து, ரூ.3870-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவரனுக்கு ரூ.584 குறைந்து, ரூ.30960-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.32,536 விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.80 பைசா குறைந்து, ரூ.39.00 விற்பனையாகிறது. கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் 33 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. தொடர் உயர்வை கண்ட தங்கத்தின் விலை தற்போது குறைந்துள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் சரிந்து, தங்க வர்த்தகம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்க வர்த்தக சரிவை ஈடுகட்ட, சுமார் ரூ.59 லட்சம் கோடி நிதி உதவி அளிக்க அமெரிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. இதையடுத்து தங்க வர்த்தகத்தில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டுள்ளது. ஆபரண தங்கம் விலை மேலும் குறையலாம் என தங்க நகை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே…
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…