வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் முடிந்த மும்பை பங்குச்சந்தை!
Mumbai stock market : வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சரிவுடன் நிறைவுபெற்றது. கடந்த வாரம் இறுதியில் முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் பங்குச்சந்தை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், சென்செக்ஸ் 74,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது.
Read More – ஆபாச படங்கள் பார்ப்பது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 617 புள்ளிகள் சரிந்து 73,503 புள்ளிகளில் நிறைவு பெற்றது. அதாவது இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 0.8% வரை குறைந்து முடிந்தன.
Read More – திருச்சியில் சிக்கிய 100 கிலோ ஹாஷிஷ் போதைப்பொருள்.. 876 கிலோ கஞ்சா.!
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின. அதன்படி, பவர் கிரிட் பங்கு 2.5%, டாடா ஸ்டீல் பங்கு 2%, எஸ்பிஐ பங்கு 1.8%, இண்டஸ் இண்ட் வங்கி பங்கு 1.5% விலை குறைந்தது. இதுபோன்று இந்துஸ்தான் யுனிலிவர், எச்டிஎஃப்சி வங்கி, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ் மற்றும் எல் அண்ட் டி பங்குகள் 1% விலை குறைந்தன.
Read More – பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு! தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
அதேசமயம் நெஸ்லே இந்தியா, பஜாஜ் ஃபின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், டிசிஎஸ் மற்றும் ஏசியன் பெயிண்ட் பங்குகள் விலை உயர்ந்து காணப்பட்டது. மேலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 161 புள்ளிகள் அதிகரித்து 22,333 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.