இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் என்பது இந்திய நாட்டின் பொருளாதாரம், உள்நாட்டு வர்த்தகத்தை கொண்டு மட்டும் நிர்ணயம் செய்யப்படுவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை வர்த்தக உலகமும் இந்திய பங்குசந்தையில் முக்கிய மாற்றங்களை, தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இன்றைய உள்நாட்டு பங்குச்சந்தை நிஃப்டி 50யின் புள்ளிகள் குறைவுக்கு, சர்வதேச வர்த்தக நிலவரமும், வங்கிகளின் நிதி நிலைமையும் முக்கிய காரணமாக அமைந்து விட்டன.
இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!
முதலீட்டாளர்கள் செவ்வாயன்று வெளியாகும் அமெரிக்க பணவீக்க தரவு, பிரிட்டிஷ் பணவீக்க தரவு மற்றும் புதன்கிழமை வெளியாகும் ஐரோப்பிய ஜிடிபி ஆகியவற்றிற்காக காத்திருந்ததால் இந்திய பங்குசந்தையில் முதலீட்டாளர்கள் கவனம் சற்று திரும்பாமல் இருந்ததால வார முதல் நாள் இந்திய பங்குசந்தை சரிவை சந்தித்துள்ளது.
இதனால், இன்றைய பங்குச்சந்தை முடிவில் நிஃப்டி 50யானது 166 புள்ளிகள் குறைந்து 21,616.05 ஆகவும், சென்செக்ஸ் 523 புள்ளிகள் சரிந்து 71,072.49 ஆகவும் முடிந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றின் பங்குகள் சென்செக்ஸ் குறியீட்டில் டாப் லிஸ்டில் சரிவடைந்து உள்ளன. சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதனால் மிக பெரிய இழப்பை சந்தித்தன.
இன்று பங்குசந்தையில் (BSE) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை முதலீடு முந்தைய அமர்வில் கிட்டத்தட்ட ரூ.386.4 லட்சம் கோடியிலிருந்தது. அந்த முதலீடு தற்போது கிட்டத்தட்ட ரூ.379 லட்சம் கோடியாக குறைந்துள்ளது, இன்று ஒரே அமர்வில் ரூ.7.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…