மத்திய பட்ஜெட் எதிரொலி: ரூ.62 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.360 உயர்வு!
மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலியால் தங்கம் விலை ரூ.62,000ஐ தாண்டி புதிய உச்சத்தை தொட்டது.
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் விலை இன்று இரண்டாம் முறையாக உயர்ந்தது.
டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், 1 வருடமாக போராடி வரும் விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்தும், தங்கம் விலை குறைப்பு, மருத்துவ உபகரணங்கள் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.
இருப்பினும், மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலி காரணமாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. இன்று காலை கிராம் 7,745 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், பட்ஜெட்டை தொடர்ந்து மாலை நிலவரப்படி, மீண்டும் விலை உயர்ந்திருக்கிறது.
இன்று (01.02.2025 ) காலை 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.7,745க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.120 அதிகரித்து ரூ.61,960க்கு விற்பனை செய்யப்பட்டது. பட்ஜெட்டை தொடர்ந்து இன்று மாலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,790க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.62,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.