“பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்” – காங்கிரஸ் அறிவிப்பு

- பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும்,பெட்ரோல்,டீசல் விலையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் விலை ரூ.100 ஐ கடந்துள்ளது.
அதாவது,கடந்த சில மாதங்களாக வேகமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலையானது,5 மாநில தேர்தலின் போது மட்டும் அதன் விலை அதிகரிக்காமல் ஒரே விலையில் நீடித்து வந்தது.
ஆனால்,தற்போது மீண்டும் பல பகுதிகளில் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு ரூ.100 தாண்டி விற்பனையாகி வருகிறது.
இதற்கிடையில்,மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி தர்மேந்திர பிரதான்,சர்வதேச அளவில் சமீபத்திய கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில்,பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து,வருகின்ற ஜூன் 11 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதாவது,காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 11 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025