மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 259.77 புள்ளிகள் சரிந்து, 54,294.89 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் உயர்வுடன் துவங்கினாலும், முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யப்பட்ட காரணத்தால் தற்போது சரிவுக்கு தள்ளப்பட்டது. அதன்படி, சென்செக்ஸ் குறியீடு 375.17 புள்ளிகள் குறைந்து, 54,179.49 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதுபோன்று, நிஃப்டி குறியீடு 82.85 புள்ளிகள் குறைந்து, 16,197.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. முதலீட்டாளர்கள் லாப நோக்கத்திற்காக பங்குகளை விற்பனை செய்யப்பட்டும் காரணத்தால் முக்கிய நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் 5 நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் காணப்படுகிறது.
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 39.71 புள்ளிகள் அதிகரித்து, 54,594.37 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 5.10 புள்ளிகள் அதிகரித்து, 16,285.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதில் 1099 பங்குகள் ஏற்றத்திலும், 760 பங்குகள் சரிவிலும், 84 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று ஏற்றம் கண்டு, 74.38 ரூபாயாக காணப்படுகிறது.
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…
சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதன்படி,…