Categories: வணிகம்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாதனையை எட்டிய டிசிஎஸ்!

Published by
பாலா கலியமூர்த்தி

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிசிஎஸ் பங்குகள் பங்குசந்தையில் புதிய சாதனையை எட்டி, அதன் சந்தை மதிப்பு ரூ.15 லட்சம் கோடியைத் தாண்டியது. மும்பை பங்குசந்தையின் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, பிஎஸ்இ-யில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.4,135.9-ஆக (4%) உயர்ந்தது. இது முந்தைய பங்குசந்தையில் டிசிஎஸ்-யின் அதிகபட்சமான ரூ.4,043 ஐத் தாண்டியது.

இதன் மூலம், டிசிஎஸ்யின் சந்தை மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் முதல் முறையாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரூ.15 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் பங்குகள் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. ஐடி துறை நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவித்து வரும் வேளையில், டிசிஎஸ் நிறுவனம் ஏஐ துறையில் புதிய திட்டத்தைப் பெற்றுள்ளது.

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைவு.!

இந்த சூழலில், டிசிஎஸ் பங்குகள் நேற்று 52 வார உயர்வை எட்டிய நிலையில், இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ்யின் சந்தை மதிப்பு ரூ.15 லட்சம் கோடியை தாண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியது. உலகளாவிய உதவி மற்றும் பயணக் காப்பீட்டு நிறுவனமான யூரோப் அசிஸ்டன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பல ஆண்டு ஒப்பந்தத்தை வென்றுள்ளதாக டிசிஎஸ் கூறியதைத் தொடர்ந்து, பங்குசந்தையில் அதன் பங்குகளின் ஏற்றம் காணப்படுகிறது.

அதாவது, யூரோப் அசிஸ்டன்ஸ் (Europ Assistance) நிறுவனத்தின் ஐடி ஆப்ரேட்டிங் மாடலை செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் வைத்து மேம்படுத்தும் மாபெரும் திட்டத்தைப் டிசிஎஸ் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் பாரீஸ் நகரில் நடந்தது. இது ஒட்டுமொத்த ஐடி சேவை நிறுவன முதலீட்டாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறலாம். இதன் காரணமாகவே டிசிஎஸ்யின் சந்தை மதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும், பங்குசந்தையில் டாடா குழுமம் இரண்டாவது மதிப்புமிக்க இந்திய நிறுவனமாகும்.

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

8 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

8 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

9 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

10 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

10 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

10 hours ago