TCS:டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குச்சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் கோடியை தாண்டியது..!!புதிய உச்சம்..!
நாட்டின் பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான TCS-ன் பங்குச்சந்தை மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே இத்தகைய உச்சத்தை அடைந்த முதல் நிறுவனமாகவும், TCS உருவெடுத்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், இன்றைய வர்த்தகம் தொடங்கியதிலிருந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகளின் மதிப்பு ஏற்றத்துடன் காணப்பட்டது.
வர்த்தகநேர மத்தியில், 52 வாரங்களில் இல்லாத உயர்வை கண்டு, 3 ஆயிரத்து 674 கோடி வருவாயுடன், TCS-ன் பங்குச்சந்தை மூலதன மதிப்பு, 7 லட்சத்து 3 ஆயிரத்து 309 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதன்மூலம், 7 லட்சம் கோடி ரூபாய் பங்கு மூலதன மதிப்பை கடக்கும் முதல் நிறுவனமாக டி.சி.எஸ் உருவெடுத்துள்ளது.
பங்குச்சந்தை மூலதன மதிப்பில், டிசிஎஸ்-க்கு அடுத்தப்படியாக, 5 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாயுடன் ரிலையன்ஸ் குழுமம் 2ஆம் இடத்தையும், 5 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயுடன் HDFC வங்கி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்