இருபிரிவினரிடையே வருமான வரி செலுத்துவதில் ஏற்றத்தாழ்வு!
மத்திய நிதித்துறைச் செயலாளர் ஹாஸ்முக் ஆதியா கூறியதில், மாத ஊதியம் பெறும் பிரிவினர், வணிகம் மற்றும் தொழில் செய்பவர்கள் இடையே வரி செலுத்துவதில் ஏற்றத்தாழ்வு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மொத்தம் 7லட்சம் நிறுவனங்கள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதாகவும் அவற்றில் பாதி நிறுவனங்கள் வருமானமே இல்லை என்றும், நட்டத்தில் இயங்குவதாகவும் கணக்குக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2016-2017 மதிப்பீட்டு ஆண்டில் மாத ஊதியம் பெறும் 1கோடியே 89 லட்சம் பேர், மொத்தம் 1லட்சத்து 44ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். அதேநேரத்தில் தொழில் மற்றும் வணிகம் செய்பவர்கள் 1கோடியே 88லட்சம் பேர் மொத்தம் 48ஆயிரம் கோடி ரூபாய்தான் வரி செலுத்தியுள்ளதாக நிதித்துறைச் செயலாளர் ஹாஸ்முக் ஆதியா தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.