பெட்ரோல், டீசல் கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்தது!
மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு வசூலிக்கப்பட்டு வந்த கலால் வரியை ரத்து செய்துள்ளது.
பெட்ரோல் டீசலுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் கலால் வரியாகவும், கூடுதல் கலால் வரியாக 6 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த இரண்டு வரிகளையும் தற்போது மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு பதிலாக சாலை வரியாக லிட்டருக்கு 8 ரூபாய் விதிக்கப்படுகிறது.
இதனால் பெட்ரோல், டீசலின் ஒட்டு மொத்த விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால், நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய நிதித்துறைச் செயலாளர் ஹஸ்முக் ஆதியா விளக்கமளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.