டாடாவின் நஷ்டம் ரூ .3,698 கோடியிலிருந்து ரூ .8,438 கோடியாக உயர்வு.!
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உள்நாட்டு வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் 2020 ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ .8,438 கோடியாக உயர்ந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நேற்று தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் கடந்த காலாண்டில் 3,679.66 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இது கடந்த ஆண்டு கண்ட நஷ்டத்தினை விட நான்கு மடங்கு அதிகமாகும். இதற்கு கொரோனா வைரஸ் பரவல் தான் காரணம் எனவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா நெருக்கடியான நிலை மத்தியில், குறைந்த வாகன உற்பத்தி மற்றும் மந்தமான விற்பனையின் பின்னணியில் இந்த நிறுவனத்தின் வருவாய் 48% வீழ்ச்சி கண்டு ரூ .31,983.06 கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ .61,466.99 கோடியாக இருந்தது.
டாடாவின் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர்
(ஜே.எல்.ஆர்) பிரிவில், கொரோனா காரணமாக தற்காலிக சில்லறை விற்பனையாளர் மற்றும் ஆலை பணிநிறுத்தம் காரணமாக விற்பனை மற்றும் இலாபங்கள் கணிசமாக பாதித்தது என்று நிறுவனம் கூறியது. ஜூன் காலாண்டில் 3,500 கோடி ரூபாய் நஷ்டத்தினை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டில் 2,391 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.