மத்தியப் பிரதேசத்தில் ₹596 கோடி மதிப்பிலான மிதக்கும் சோலார் திட்டத்தை தட்டி தூக்கிய டாடா
டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் லிமிடெட் மத்தியப் பிரதேசத்தில் 125 மெகாவாட் மிதக்கும் சோலார் திட்டத்தை அமைப்பதற்காக NHDC லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ₹596 கோடி மதிப்பிலான (LoA) மொத்த ஒப்பந்த மதிப்பிற்கான ஒப்புதலை பெற்றுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வாவில் உள்ள ஓம்காரேஷ்வர் நீர்த்தேக்கத்தில் அமைக்கப்படவுள்ள திட்டத்திற்கான ஏலம் கோரப்பட்டது.
NHDC என்பது NHPC லிமிடெட் மற்றும் மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் கூட்டு முயற்சியாகும்.