மாலத்தீவு விவகாரம்.. பெரிய திட்டத்துடன் லட்சத்தீவில் களமிறங்கிய டாடா.!

இம்மாத தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு கடல்சார் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் பங்கேற்று அதனை போட்டோ, விடீயோக்களாக தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார். லட்சத்தீவு பற்றிய பிரதமர் மோடியின் பதிவு பற்றி மாலத்தீவு எம்பிக்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தனர்.
வியாபாரத்தை விட தேசப்பற்று முக்கியம்.! மாலத்தீவை ஓரம்கட்டிய EaseMyTrip.!
பிரதமர் மோடி குறித்தும், இந்திய சுற்றுலாத்துறை குறித்தும் மாலத்தீவு எம்பிகளின் கருத்துக்களுக்கு, இந்திய அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும் , பல்வேறு பிரபலங்கள் தங்கள் மாலத்தீவு பயணங்களை ரத்து செய்தனர். சுற்றுலாத்துறையை பெரிதாக நம்பியுள்ள மாலத்தீவு அரசுக்கு இந்த எதிர்ப்புகள் கலக்கத்தை ஏற்படுத்தின. இதனை அடுத்து உடனடியாக 3 எம்பிகளை சஸ்பெண்ட் செய்தது மாலத்தீவு அரசாங்கம்.
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம், மாலத்தீவு மீதான எதிர்ப்பலை ஆகியவை சுற்றுலாவாசிகளை இந்தியாவில் உள்ள லட்சத்தீவு பக்கம் திருப்பியது. பிரபல பயண ஏற்பாடு தளமான makeMyTrip தளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு லட்சத்தீவு சுற்றுலா இடங்களை தேடுவோர் எண்ணிக்கை 3500 மடங்கு அதிகரித்துள்ளது.
லட்சத்தீவுக்கு சுற்றுலாவாசிகள் மத்தியில் எழுந்த வரவேற்பை கண்டு தற்போது பிரபல நிறுவனங்கள் லட்சத்தீவில் முதலீடு செய்ய ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றன. பிரபல தொழில் நிறுவனமான டாடா குழுமம் வரும் 2026ஆம் ஆண்டிற்குள் லட்சதீவுகளில் இரண்டு தாஜ் முத்திரை கொண்ட சொகுசு விடுதிகளை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது.
IHCL எனும் ஹோட்டல் கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து சொகுசு விடுதிகள் கட்டுவதை டாடா உறுதி செய்துள்ளது. லட்சத்தீவுகளில் உள்ள சுஹேலி மற்றும் கத்மத் ஆகிய இரண்டு இடங்களில் ஆடம்பரமான ஓய்வு விடுதிகளை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த இடங்கள் லட்சத்தீவு சுற்றுலாப் பயணிகளிடையே அதிகம் தேடப்படும் இடங்களாகும்.
ரிசார்ட் திட்டத்தை பற்றி IHCL நிறுவனம் கூறுகையில், சுஹேலி ரிசார்ட்டில் 60 கடற்கரையோர வில்லாக்கள் மற்றும் 50 நீச்சல்குள வில்லாக்கள் உட்பட 110 வில்லாக்கள் (தனித்தனி விடுதிகள்) இருக்கும் என்றும், காட்மட் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் 110 அறைகள் இருக்கும் என்றும், இதில் 35 நீச்சல் குளத்துடன் கூடிய வில்லாக்கள் மற்றும் 75 பீச் வில்லாக்கள் கட்டப்பட உள்ளன என IHCL நிறுவனம் தெரிவித்துள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025