இந்தியாவில் நகைக்கடை விற்பனையாளர்கள் ஆன்லைனில் குறைந்த பட்சமாக 100 ரூபாய்க்கு தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளனர்.
நாடு தழுவிய கொரோனா ஊரடங்குக்கு பிறகு தங்க நகை விற்பனையில் சரிவு ஏற்பட்டது.எனினும்,இது ஆன்லைன் தங்கம் விற்பனைக்கான இந்தியாவின் புதிய சந்தையில் ஒரு புதிய முயற்சிக்கு வழிவகுத்தது.
அந்த வகையில்,டாடா குழுமத்தின் தனிஷ்க், கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா, பிசி ஜுவல்லர் மற்றும் செங்கோ கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் போன்ற தங்க நகை விற்பனையாளர்கள் தங்களுடைய அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நேரடியாகவோ அல்லது டிஜிட்டல் தங்க மேடைகளுடன் (digital gold platforms) டை-அப் மூலமாகவோ 100 ரூபாய்க்கு தங்கத்தை விற்பனை செய்வதற்கான சலுகைகளைத் தொடங்கியுள்ளனர்.அதன்படி,தங்கம் வாங்க விரும்பும் நுகர்வோர் குறைந்தபட்சம் 1 கிராம் தங்கத்திற்கு முதலீடு செய்தவுடன் அவர்கள் விரும்பினால் டெலிவரி செய்யப்படும்.
இந்தியாவிற்கு டிஜிட்டல் தங்க விற்பனை புதியதல்ல,ஏனெனில், ஏற்கனவே மொபைல் வாலட்கள் மற்றும் ஆக்மாண்ட் கோல்ட் ஃபார் ஆல் போன்ற தளங்கள்,உலக தங்க கவுன்சில் ஆதரவுடைய சேஃப் கோல்ட் தயாரிப்புகளை வழங்குகின்றன.ஆனால்,நகைக்கடை விற்பனையாளர்கள் மட்டும் இதுவரை தங்கம் போன்ற பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதிலிருந்து விலகி இருந்தனர்.
இந்த நிலையில்,இந்தியாவில் நகைக்கடை விற்பனையாளர்கள் ஆன்லைனில் குறைந்த பட்சமாக 100 ரூபாய்க்கு தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளனர்.
மேலும்,இது தொடர்பாக,4,000 க்கும் மேற்பட்ட நகைக்கடைகளை பங்குதாரர்களாகக் கொண்ட ஆக்மாண்ட் கோல்ட்டின் இயக்குனர் கேதன் கோத்தாரி கூறுகையில்:”கொரோனா, வெளிப்படையாக, நிறைய நகைக்கடைக்காரர்களின் மனநிலையை மாற்றியுள்ளது, மேலும் அவர்கள் ஆன்லைனில் நகைகளை விற்பனை செய்வதில் முனைப்புடன் உள்ளனர். எனவே இது முழு மனநிலையின் அடுத்த கட்ட முயற்சியாகும்”,என்று கூறினார்.
தங்கத்தின் தேவை உச்சத்தில் இருக்கும் பண்டிகை காலம் தொடங்கும் போதே நகைக்கடைக்காரர்கள் இந்த சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.இணையம் வழியாக வாங்குவதற்கு அதிகமான இந்தியர்கள் ஆர்வமாக இருப்பதால் டிஜிட்டல் கொள்முதல் அதிகரித்து வருகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…