இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அந்த வகையில், தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், பெண்கள் கூட்டம் கூட்டமாக நகை வாங்க செல்கின்றனர்.
அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கடந்த 4 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென்று சரிந்து வந்தது. இந்த நிலையில், இன்று சென்னையில் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. இதனால், நகைப்பிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
அதன்படி, சென்னையில் (10.11.2023) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து கிராமுக்கு ரூ.5,645க்கும், சவரன் ரூ.45,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.77க்கும், ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனையாகிறது.
(09.11.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,615க்கும் விற்பனையானது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து ரூ.76.20க்கும் கிலோவுக்கு ரூ.76,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…