ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை! இந்த வாரம் எப்படி இருக்கும்?
சென்னை : கடந்த வாரத்தில் ஏற்றம் மட்டுமே கண்டு வந்த இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்றும் உச்சம் பெற்று வருகிறது.
கடந்த வாரத்தின் இறுதி நாளில், இந்திய பங்குச்சந்தைகளான 2 குறியீடுகளும் ஏற்றத்தில் முடிந்தது. மேலும், அது ஏற்றம் கண்டாலும், பெரிதளவு புள்ளிகளைத் தொடவில்லை. மேலும், அந்த வார வர்த்தக நாள் முடிவில் நம் மும்பை பங்குச் சந்தையான, (பிஎஸ்சி) சென்செக்ஸ் 81,053 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே போல, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50, 41 24,811-ல் நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த வாரத்தின் முதல் நாளில் மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 565 புள்ளிகள் உயர்ந்த 81,640 புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. அதே நேரம் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 50 162 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 24, 985 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. வாரத்தின் முதல் நாளே இப்படி புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.
இந்த வாரம் எப்படி இருக்கும்?
இந்த வாரமும் இந்தியப் பங்குச்சந்தை பெரிதளவு சரிவைக் காணாது எனவும், உச்சம் செல்வதற்கு வாய்ப்புகள் சற்று இருப்பதாகவும் நிபுணர்களும், முதலீட்டாளர்களும் கருதுகிறார்கள். மேலும், இந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 47-வது ஆண்டின் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும், அந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல்-களின் IPO அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.47% உயர்ந்துள்ளது. இதனால், இந்த வாரம் பங்குச்சந்தையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) மற்றும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் (DII) விற்பனை மற்றும் வாங்குதல் நடவடிக்கைகள் இந்த வாரப் பங்குச்சந்தையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகிறார்கள்.
கடந்த வாரம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.1609 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றது. ஆனால், மறுபக்கம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.13,020 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கினார்கள். இதனால் பங்குச்சந்தையில் பெரிதளவு பாதிப்பு ஏற்படவில்லை. இதே போலத் தான் இந்த வாரமும் அவர்களின் செயல்பாடுகள் நம் பங்குச்சந்தையில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.