சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வர்த்தகம் குறைவு.! மஹிந்திரா நிறுவன பங்குகள் 2%க்கு மேல் உயர்வு.!
இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, முந்தைய நாட்களை போலவே இன்றைய நாளின் வர்த்தகத்திலும் இன்றைய நாளின் வர்த்தகத்திலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வார்த்தகமானது.
இன்று காலை 65,101.95 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 65.30 புள்ளிகள் குறைந்து, 64,910.67 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 6.30 புள்ளிகள் குறைந்து 19,437.20 புள்ளிகளாகவும் வார்த்தகமானது.
இந்த இறக்கம் சற்று கூட ஏற்றமடையாமல் வர்த்தகநாளின் முடிவிலும் தொடர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 143.41 புள்ளிகள் சரிந்து, 64,832.20 புள்ளிகளாகவும், நிஃப்டி 48.20 புள்ளிகள் சரிந்து 19,395.30 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
மேலும், முந்தைய வர்த்தகநாளில் சென்செக்ஸ் 64,975.61 புள்ளிகளாவும், நிஃப்டி 19,443.50 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.77 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 80.23 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 67.00 அல்லது 1.07% உயர்ந்து ரூ.6,341 ஆக விற்பனையாகிறது.
இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 13 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது. அதன்படி, மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (+4.43%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (+1.50%), இண்டஸ் இண்ட் வங்கி (+1.28%), டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (+1.06%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.
இதில் மஹிந்திரா நிறுவன பங்குகள் காலை 2.50 சதவீதம் உயர்ந்திருந்தது. இது வர்த்தக முடிவில் 1.93 சதவீதம் உயர்ந்து 4.43% ஆக உள்ளது. அதேபோல ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (-1.58%), டெக் மஹிந்திரா லிமிடெட் (-1.33%), இன்ஃபோசிஸ் லிமிடெட் (-1.22%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (-1.11%), பஜாஜ் ஃபைனான்ஸ் (-1.00%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.