முந்தைய வாரங்களில் சரிவுடன் வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள், இந்த வார வர்த்தக நாளில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, வாரத்தின் முதல் நாளான இன்று 66,082 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 52.56 புள்ளிகள் உயர்ந்து 66,061.71 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 8.45 புள்ளிகள் சரிந்து 19,682.70 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,009 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,674 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. முன்னதாக, 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது.
கடந்த வாரத்தில் அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் பங்குச்சந்தையானது வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வந்தநிலையில் இன்று ஏற்றமடைந்துள்ளது. இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டில், மொத்தம் 15 பங்குச் சந்தை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இன்னும் 6 விடுமுறைகள் மீதம் உள்ளன. அதன்படி, அடுத்த பங்குச் சந்தை விடுமுறை அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தி ஜெயந்தி அன்று வருகிறது. அதேபோல, அக்டோபர் 24ம் தேதி தசரா, நவம்பர் 14ம் தேதி தீபாவளி, நவம்பர் 27ம் தேதி குருநானக் ஜெயந்தி மற்றும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் ஆகிய ஐந்து பங்குச் சந்தை விடுமுறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…