வணிகம்

சரிவை நோக்கி பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 62,812 புள்ளிகளாக வர்த்தகம்..!

Published by
செந்தில்குமார்

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 355 புள்ளிகள் சரிந்து 62,812 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,664 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை, வாரத்தின் 2வது நாளான இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய வர்த்தக நாளில் 63,176 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 355 புள்ளிகள் அல்லது 0.56% என சரிந்து 62,812 புள்ளிகளாக நிறைவடைந்துள்ளது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 90.80 புள்ளிகள் அல்லது 0.48% சரிந்து 18,664 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 63,168 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,755 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

நேற்று காலை 63,474 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை, வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 216 புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது. நிஃப்டி 70.55 புள்ளிகள் சரிந்து 18,755 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. மேலும், கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், விப்ரோ லிமிடெட், டெக் மஹிந்திரா, லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

4 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

4 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

4 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

5 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

6 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

7 hours ago