Stock Market: முன்றாவது நாளாக வீழந்த பங்குச்சந்தை.! சென்செக்ஸ் 453 புள்ளிகள் சரிவு.!

SensexFalls

நேற்று நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழாவானது கொண்டாடப்பட்ட நிலையில், இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை நாளாகும். இந்த நாளில் வர்த்தகங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. விடுமுறை முடிந்த நிலையில் இன்று வர்த்தகங்கள் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று 67,080 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 453.91 புள்ளிகள் சரிந்து 67,142.93 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 141.90 புள்ளிகள் சரிந்து 19,991.40 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 67,596 புள்ளிகளாகவும், நிஃப்டி 20,133 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. முன்னதாக, 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. 2023 ஆம் ஆண்டில், மொத்தம் 15 பங்குச் சந்தை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் இன்னும் 6 விடுமுறைகள் மீதம் உள்ளன. அதன்படி, அடுத்த பங்குச் சந்தை விடுமுறை அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தி ஜெயந்தி அன்று வருகிறது. அதேபோல, அக்டோபர் 24ம் தேதி தசரா, நவம்பர் 14ம் தேதி தீபாவளி, நவம்பர் 27ம் தேதி குருநானக் ஜெயந்தி மற்றும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் ஆகிய ஐந்து பங்குச் சந்தை விடுமுறைகள் உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்