Stock Market: ஐந்தாவது நாளில் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ்.! 66,009.15 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு.!
முந்தைய வாரங்களில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள், இந்த வார வர்த்தக நாளில் வீழ்ச்சியுடனே வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று 66,215 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 221.09 புள்ளிகள் சரிந்து 66,009.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 68.10 புள்ளிகள் சரிந்து 19,674.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,230 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,742 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. முன்னதாக, 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது.
அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் பங்குச்சந்தையானது வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டில், மொத்தம் 15 பங்குச் சந்தை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இன்னும் 6 விடுமுறைகள் மீதம் உள்ளன. அதன்படி, அடுத்த பங்குச் சந்தை விடுமுறை அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தி ஜெயந்தி அன்று வருகிறது. அதேபோல, அக்டோபர் 24ம் தேதி தசரா, நவம்பர் 14ம் தேதி தீபாவளி, நவம்பர் 27ம் தேதி குருநானக் ஜெயந்தி மற்றும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் ஆகிய ஐந்து பங்குச் சந்தை விடுமுறைகள் உள்ளன.