மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் பிஎஸ்இ சென்செக்ஸ் 133.62 புள்ளிகள் உயர்ந்து 63,103 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு.
கடந்த சில நாட்களில் ஏற்றத்துடன் இருந்த இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள், கடந்த வாரம் இதுவரை இல்ல உச்சத்தை எட்டி புதிய சாதனையை படைத்தது. அதனைத்தொடர்ந்து இன்றைய வர்த்தக நாளில் 63,151 புள்ளிகள் எனத் தொடங்கிய சென்செக்ஸ் 133.62 புள்ளிகள் உயர்ந்து 63,103 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 40.70 புள்ளிகள் அல்லது 0.22% உயர்ந்து 18,731 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 62,970 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,691 புள்ளிகளாகவும் நிறைவடைந்தது.
கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்திருப்பது மும்பை பங்குச்சந்தை குறியீடுகள் உயர்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால் சென்செக்ஸ் குறியீட்டில் மஹிந்திரா & மஹிந்திரா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன் நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…