பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 63,103 புள்ளிகளாக வர்த்தகம்..!

sensex rise

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் பிஎஸ்இ சென்செக்ஸ் 133.62 புள்ளிகள் உயர்ந்து 63,103 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு.

கடந்த சில நாட்களில் ஏற்றத்துடன் இருந்த இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள், கடந்த வாரம் இதுவரை இல்ல உச்சத்தை எட்டி புதிய சாதனையை படைத்தது. அதனைத்தொடர்ந்து இன்றைய வர்த்தக நாளில் 63,151 புள்ளிகள் எனத் தொடங்கிய சென்செக்ஸ் 133.62 புள்ளிகள் உயர்ந்து 63,103 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 40.70 புள்ளிகள் அல்லது 0.22% உயர்ந்து 18,731 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 62,970 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,691 புள்ளிகளாகவும் நிறைவடைந்தது.

கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்திருப்பது மும்பை பங்குச்சந்தை குறியீடுகள் உயர்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால் சென்செக்ஸ் குறியீட்டில் மஹிந்திரா & மஹிந்திரா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.

இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன் நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்