பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 78 புள்ளிகள் அதிகரித்தது..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 78 புள்ளிகள் அதிகரித்து 57,634 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 16,985 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 57,510 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 78.94 புள்ளிகள் அல்லது 0.14% என அதிகரித்து 57,634 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 13.45 புள்ளிகள் அல்லது 0.079% அதிகரித்து 16,985 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டைட்டன் கம்பெனி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ் லிமிடெட், விப்ரோ லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி, இன்ஃபோசிஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.