பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 38 புள்ளிகள் அதிகரித்தது..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 38 புள்ளிகள் அதிகரித்து 60,702 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,869 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 38.66 புள்ளிகள் அல்லது 0.064% என அதிகரித்து 60,702 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 1.80 புள்ளிகள் அல்லது 0.010% குறைந்து 17,869 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,663 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,871 ஆகவும் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் :
இன்றைய வர்த்தக நாளில் 60,715 புள்ளிகள் என தொடங்கிய சென்செக்ஸ் 38 புள்ளிகள் அதிகரித்து 60,702 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது. பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், திவி லேபரட்டரீஸ் லிமிடெட், பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட், HDFC ஆயுள் காப்பீட்டு நிறுவனம் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்ற நிறுவனகங்கள் சென்செக்ஸில் அதிக லாபம் அடைந்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட், ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட், டாடா மோட்டார்ஸ் லிமிடெட், யுபிஎல் லிமிடெட் நிறுவன பங்குகள் சரிந்துள்ளது.
நிஃப்டி :
நிஃப்டியில் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், திவி லேபரட்டரீஸ் லிமிடெட், பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட், எச்டிஎப்சிலைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட், ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட், டாடா மோட்டார்ஸ் லிமிடெட், யுபிஎல் லிமிடெட்நிறுவனத்தின் பங்குகள் சரிந்துள்ளது.