பங்குச்சந்தை உயர்வு.! சென்செக்ஸ் 224 புள்ளிகள் அதிகரித்தது.!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயர்ந்து 59,932 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,762 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளின் முடிவில் மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 224 புள்ளிகள் அல்லது 0.38% என உயர்ந்து 59,932 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 5.90 புள்ளிகள் அல்லது 0.033% குறைந்து 17,610 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய நாளின் ஆரம்ப வர்த்தகத்தில் பங்கு அளவுகோல்கள் வீழ்ச்சியடைந்தன. பங்குகள் வீழ்ச்சியடைந்ததால் பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவை பெரும் பின்னடைவைச் சந்தித்தன.
ஐடிசி (ITC), அல்ட்ரா டெக் சிமெண்ட் (UltraTech Cement), இண்டஸ்இண்ட் வங்கி (IndusInd Bank), டைட்டன் (Titan) மற்றும் மாருதி(Maruti) நிறுவனங்கள் அதிக லாபத்தை பதிவு செய்தன.
இன்றைய நாளின் முடிவில் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 27% சரிவடைந்து, ஐடிசி-யின் பங்குகள் 5% ஏற்றம் அடைந்துள்ளது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,708 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,616 ஆகவும் நிறைவடைந்தது.