பங்குச்சந்தை உயர்வு.! சென்செக்ஸ் 65,631.57 புள்ளிகளாக நிறைவு.!

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. அதன்படி, கடந்த செப்டம்பர் 17ம் தேதி மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 231.90 புள்ளிகள் வரை சரிந்தது.
இந்த பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணமாக உள்ளன. இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வாரத்தின் நான்காம் நாளான இன்று 65,813 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய சென்செக்ஸ் 405.53 புள்ளிகள் உயர்ந்து 65,631.57 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதேபோல, என்எஸ்இ நிஃப்டி 109.65 புள்ளிகள் உயர்ந்து 19,545.75 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,226 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,436 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. இதற்கு முன்னால் 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025